Tubetamil Studio Launch : Chennai

Posted on April 13th, 2016 | Category: Tubetamil,Tubetamil Cinema,Tv Shows | Post by: Tamilan
tamil cinema tamil tamil songs


ரியூப் தமிழ் தமிழகத்தில் இரண்டாவது புதிய காலடி..

இன்றிலிருந்து ஆன் லைன் மூலம் உடனுக்குடன் தகவல்கள்…

ரியூப் தமிழ் காணொளி இணையத்தளம் தமிழகத்தில் இன்று புதிய காலடி பதிக்கிறது.

ஏற்கெனவே தமிழகத்தில் ரியூப் தமிழ் நிருபர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள், 24 மணி நேரமும் தமிழக மண்ணில் ரியூப்தமிழுக்காக நமது நிருபர்கள் தொழிற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது மேலும் ஒரு புதிய கலையகம் புலரும் புத்தாண்டில் இருந்து ஆரம்பிக்கப்படுகிறது, இன்றிரவில் இருந்து ஆன் லைனில் ரியூப்தமிழின் அடுத்த அதிரடிப் பாய்ச்சல் ஆரம்பிக்கிறது.

வானவில்லின் வர்ணக் கோலங்களாக ஊடக வானில் ஓர் ஒப்பற்ற சாதனை ரியூப் தமிழ்..!

இப்போது தமிழகத்தில் இருந்து வெளிவரும் ஆன் லைன் இணையத்தளங்களின் முன்னணி வரிசையில் கனவேகத்தில் பூத்து சொரிந்து புது மணம் வீசப்போகிறது உங்கள் ரியூப் தமிழ்..

உலகம் முழுவதும் சாதனை படைத்துவரும் உங்கள் ரியூப்தமிழ் தமிழகக் கலையகம் போல இலங்கையிலும் புதிய கலையகத்தை ஆரம்பிக்கும் பணிகள் இறுதி வடிவமைப்பில் இருக்கின்றன.

ரியூப் தமிழ் நேயர்களே, ரசிகர்களே.. காணொளி ஊடக வரலாற்றில் உங்கள் ரியூப் தமிழின் அடுத்த மகத்தான பாய்ச்சல் இதுவாகும்..

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.. பாரதி
ஆனந்தச் சேவல்கள் எங்கும் கூவின..
சோவென முழங்கியது சோளகக் காற்று..
வான வெளியின் வண்ண விளக்குகளாக ஒவ்வொரு காணொளியும் ஒளிர..
மையோ.. மறிகடலோ.. மழை முகிலோ.. இது
வடிவென்பதோர் அழியா அழகுடைத்தோ..
அற்புதமோ சிவனருளோ என்று அதிசயிக்க..
என்னே இதன் சிறப்பென உள்ளங்கள் குளிர்ந்து போற்ற..
தாயாய் சுமக்கும் உங்கள் இல்லங்கள் தேடி
முன்னே வந்துதித்த முருகனாய்
முத்தமிழாய் முழங்கி வருகிறது ரியூப் தமிழ்..

புரட்டுங்கள்.. புன்னகையுங்கள்.. புளகாங்கிதம் அடையுங்கள்..!

காதல் ஓவியம் காணும் காவியம்..
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்..
என்றும் ஆனந்தம் பேரின்பம்.. ஓகோ..
லாலா லால லா.. லாலா லா லலா..

அனைவரும் புத்தாண்டு வாழ்த்துக்கள்…

Loading...

Our Latest Videos

Comments are closed.