Pi’s Lullaby – Life of Pi – Bombay Jayashree – Tamil Song

January 17th, 2013| Category: Tamil Songs
     
 

ஒஸ்கார் விருதுக்கு தெரிவான தமிழ் பாடல்!…

life of pi Pis Lullaby   Life of Pi   Bombay Jayashree   Tamil Songசினிமாவில் உயரிய விருதாக திகழும் ஒஸ்கார் விருதுக்கு லைஃப் ஆஃப் பை படத்தில் இடம்பெற்ற தமிழ் பாடல் தெரிவாகியுள்ளது.

85வது ஒஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெவேரி ஹில்ஸ் பகுதியில் பிப்ரவரி 24ஆம் திகதி நடைபெற உள்ளது.

இதில், லைஃப் ஆஃப் பை படத்திற்காக இந்தியாவின் பிரபல கர்நாடக இசைப்பாடகியான பாம்பே ஜெயஸ்ரீ எழுதிய “பைஸ் லுல்லாபை” என்ற தமிழ் பாடலும் சிறந்த பாடல் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இப்பாடலுக்கு கனடாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் மைக்கேல் டேன்னாஇசை அமைத்துள்ளார்.

இதே பாடலுக்காக இவர் சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இதுதவிர சிறந்த படத்திற்காகவும் லைஃப் ஆஃப் தெரிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Comments are closed.